கடந்த சில தினங்களுக்கு முன் களஞ்சியத்துக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் சிகிச்சைக்கு பல லட்சங்கள் செலவாகும் என செய்திகள் வந்தன. இந்த செய்தியை அஞ்சலியின் வீட்டு வரை கொண்டு சென்று அவரை ச்ச்ச்ச்ச்ச்சு கொட்டும் அளவுக்கு மனதை மாற்ற செய்தார்கள். அவரின் மருத்துவ செலவுகளை அஞ்சலி ஏற்க முன் வருவதாக இருந்தது, ஆனால் அதற்கு முன் அவரின் நிலை குறித்து தெரிந்து கொள்ள அஞ்சலி சில ஸ்பைகளை மருத்துவமனைக்கு அனுப்பி வேவு பார்க்கச் சொன்னார்.
வேவு பார்க்கச் சென்றவர்கள் அஞ்சலியிடம் திரும்பி வந்து அவர் நல்லாதான் இருக்காரு என்று சர்டிஃபிகேட் கொடுக்க இனி களஞ்சியத்துக்கு கருணை இல்லை என்று வீடு தேடி வருவோரின் முகத்தில் அடிக்கும்படி கதவை டமார்ர்ர்ர்ர் என்று சாத்திவிடுகிறாராம். விபத்து ஏற்பட்டு உண்மை ஆனால் அதில் களஞ்சியத்துக்கு ஐசியுவில் சிகிச்சை என்று வதந்திகளை பரப்பி பணம் பிடுங்கத்தான் இந்த நாடகம் என்று தெரியவந்துள்ளது. ம்ம்ம்ம்ம்…. மானை வேட்டையாட எப்படியெல்லாம் வேலை நடக்குது சாமியோவ்….