ஒல்லிப் பிச்சான் நடிகர் நடிக்க, வேலான ஒளிப்பதிவாளர் முதன் முதலில் இயக்குனராக அறிமுகமான ‘வெட்டி டிகிரி ஹோல்டர்’ படத்தில் கன்சஸ்டரக்ஷன் கம்பெனி அதிபர் கேரக்டரில் வில்லனாக அறிமுகமாகி நடித்தவர் அந்தத் தம்பி . வடக்கத்தி சூப்பர் ஸ்டாரின் பெயர் போலவே இருக்கும் இந்தத் தம்பியின் பெயர் .
‘கொலவெறி’ இசையும் இந்தத் தம்பியும் பள்ளிக்காலத்து நண்பர்கள் . இசையின் சிபாரிசில்தான் இவருக்கு டிகிரி ஹோல்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பே கிடைத்தது . அதன் மூலம் ஒல்லிப்பிச்சானின் மனைவிக்கும் அறிமுகம் ஆனார் .
தவிர இவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதால் அப்படியே உச்ச நட்சத்திரத்தின் அறிமுகமும் கிடைத்தது .
அனால் இந்தத் தம்பிக்கு சம்மந்தமே இல்லாத ரூட்டில் இருந்த அந்தப் பெண்மணியோடு அப்படி ஒரு நெரர்ர்ர்ர்ருங்கிய உறவு ஏற்படும் என்று… யாருமே எதிர்பார்க்கவில்லை .
எந்தப் பெண்மணியோடு ? என்றால் கர்நாடக இசையிலும் கானக் குரலிலும் மயக்கும் அவ்விட பூமியைச் சேர்ந்த பிரபல பாடகரின் மருமகளோடு !
பாடகரின் மகனும் பாடகர்தான். அண்மையில் அந்த மகன் பாடகர் கூட, ஒல்லிப் பிச்சான் நடிகரின் லேட்டஸ்ட் படத்தில் நடிகராக ‘மாரி’யிருந்தார்.
சம்மந்தப்பட்ட பெண்மணிக்கு இரண்டாவது குழ்நதை பிறந்து ஆறுமாதம்தான் ஆகிறது . அதற்குள் கணவனைக் கண்டுகொள்ளாமல் மாமனாரின் கவுரவம் பற்றியும் கவலைப்படாமல் அந்த அறிமுக வில்லன் நடிகருடன் அப்ப்ப்பப்படி நெருக்கம் ஆகிவிட்டாராம் .
இந்த உறவு, ஒல்லி நடிகரின் மனைவியும் உச்ச நட்சத்திரத்தின் மகளுமானவருக்கும் தெரியுமாம் .
பிள்ளையின் வாழ்க்கை பாழாகி விடுமே என்று பயந்து போன அந்த அறிமுக வில்லன் நடிகரின் பெற்றோர்கள், விஷயத்தை கொலவெறி இசையின் பெற்றோர் மூலம் உச்ச நட்சத்திரத்தின் மனைவி காதில் போட, அவர் விசயத்தை தன் கணவர் காதுக்குக் கொண்டு போக, முகம் சுளித்த உச்சம், அறிமுக வில்லன் தம்பியை அழைத்து ஸ்ட்ராங்காக அட்வைஸ் கொடுத்தாராம்.
அதே நேரம் ‘அவர் அப்படித்தான் சொல்வாரு நீ கவலைப் படவேண்டாம்’ என்று அந்த அறிமுக வில்லனுக்கு ஒரு பக்கம் இருந்து தைரியமும் போக, எதைப் பற்றியும் கவலைப்படாமல் திரிகிறதாம் ஜோடி . ‘எங்களை யாராலும் பிரிக்க முடியாது’ என்று சபதம் வேறு போடுகிறதாம்.
குடும்பத்துக்கு வந்த இழுக்கைப் பார்த்து என்ன செய்வது என்பது புரியாமல் மாமனாரான பழம்பெரும் பாடகர் மனம் குமைய, நொறுங்கிப் போய்க் கிடக்கிறாராம் அண்மையில் நடிகராகவும் மாரிய மகன் பாடகர்.
எப்படியெல்லாம் லிங்க் விழுவுது பாருங்க .!