கிரிக்கெட் விளையாட்டை தமிழ் நாட்டுக்காக விளையாடிய லக்ஷ்மி ப்ரியா சந்திர மௌலி இப்போது ‘கள்ளபடம்’ திரை படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ‘ கள்ள படம் ‘ படப்பிடிப்பின் போது இயக்குனர் வடிவேல் ஒரு சில காட்சிகளுக்காக லக்ஷ்மி ப்ரியாவை ஒரு சில கிலோ எடை கூட வேண்டும் என கூறினார் . அவ்வளவுதானே சார் , அப்படியே ஆகட்டும் என்று கூறி சென்றார்.அளவில்லாமல் சாப்பிட்ட இனிப்புகளின் உதவியால் எடையை கூட்டவும் செய்தார் . காட்சியை படமாக்கிய பிறகு இயக்குனர் இப்போது மீண்டும் எடையை குறைக்க சொன்னார். தன்னுடைய சீரிய முயற்சியாலும் கடினமான உடல் உழைப்பாலும் லக்ஷ்மி ப்ரியா எடையை குறைக்கவும் செய்தார். பொதுவாக கதாநாயகர்கள் மட்டுமே மென கெடும் இத்தகைய விசேஷ உழைப்பை லக்ஷ்மி ப்ரியா செய்தது மிகவும் பெருமைக்குரியது.
இதை பற்றி லக்ஷ்மி ப்ரியா கூறும் போது ‘ என்னுடைய கதாபாத்திரம் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்க பெற்ற சக்தி வாய்ந்த கதா பாத்திரம் ஆகும் .இத்தகைய குணாதிசயங்கள் பொதுவாகவே நாயகர்களுக்கு மட்டுமே அமைய பெரும் . என் திரை உலக பயணத்தின் துவக்கத்திலேயே , என்னுடைய அபிமான நடிகை நந்திதா தாஸ் ஏற்ற கதாபாத்திரம் போலவே எனக்கும் கிடைத்தது என் பாக்கியமே . சிறந்த நடிகையாக பெயர் வாங்க வேண்டும் என்பதுதான் என் ஆசையே தவிர, நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் என்பதல்ல’ என்று கூறினார்.