கடந்த ஏழு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ‘த்ரிஷ்யம்’. மோகன்லால்-மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய இந்தப்படம் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது இந்தி மற்றும் சீன மொழிகளிலும் ரீமேக் ஆனது. குறிப்பாக தமிழில் கமல்-கௌதமி நடிப்பில் ‘பாபநாசம் என்கிற பெயரில் இந்தப்படம் வெளியாகி இங்கேயும் வெற்றி பெற்றது.
இந்தநிலையில் இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் த்ரிஷ்யம்-2 என்கிற பெயரில் தற்போது வெளியாகி முதல் பாகத்திற்கு இணையான வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து தெலுங்கிலும் வெங்கடேஷ்-மீனா நடிப்பில் த்ரிஷ்யம்-2 படத்தின் படப்பிடிப்பு சுடச்சுட ஆரம்பித்து விட்டது. இந்தமுறை ஜீத்து ஜோசப்பே தெலுங்கு ரீமேக்கையும் இயக்குகிறார்.
ஆனால் தற்போது இந்த இரண்டாம் பாகத்தை தமிழில் ரீமேக் செய்ய நினைத்தாலும் முடியாத சூழல் தான் இருக்கிறது.காரணம் பாபநாசம் வெளியான கொஞ்ச காலத்திலேயே கமலும் கௌதமியும் தனித்தனியாக பிரிந்துவிட்டனர். இனி இவர்களை ஒன்றிணைத்து பாபநாசம்-2வை உருவாக்குவது இயலாத காரியம். அதற்கு பதிலாக மோகன்லால் படத்தையே தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டு விடலாம். ஒருவேளை இப்படி நடக்கும்னு தெரிஞ்சிருந்தா கமலும் கௌதமியும் பிரிஞ்சிருக்க மாட்டாங்களோ என்னவோ ?