இந்தியன்-2வை ஒதுக்கி வைத்து தேவர்மகன்-2வுக்கு மாறுகிறாரா கமல்..?


கமல் தீவிர அரசியலில் இறங்கி விட்டதால் இனி படங்களில் நடிப்பாரா இல்லை சினிமாவுக்கு முழுக்கு போடுவாரா என்கிற பேச்சு சில மாதங்களுக்கு முன்பு வரை இருந்தது. ஆனாலும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்கிற விதமாக இந்தியன் 2 படம் உருவாக இருப்பதாக இயக்குனர் ஷங்கரும் கமலும் சேர்ந்து அறிவித்தனர். இதற்கிடையே தேவர்மகன்-2விலும் தான் நடிக்க ஆவலாக இருப்பதாக கமல் ஓரிரு முறை தனது ஆசையை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் இந்தியன்-2 படம் பூஜையுடன் துவங்க பட்டாலும் அடுத்ததாக மேற்கொண்டு வளராமல் அப்படியே நிற்கிறது. அதேசமயம் இன்னொரு பக்கம் கமல் தேவர்மகன் படம் படமாக்கப்பட்ட லொகேஷன்களுக்கு சென்று பார்வையிட்டு வந்துள்ள செய்தியும் வெளியானது.. மேலும் தேவர் மகன் பாணியில் மீசையும் வளர்த்து வருகிறார்.

அதாவது இந்தியன்-2 படத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தேவர் மகன்-2 படத்தில் நடிக்க கமல் ஆர்வம் காட்டுகிறார் ஏன்றும் சொல்லப்பட்டு வருகிறது.. இதில் எது உண்மை என்பது இன்னும் சில தினங்களில் தெரியவரும்