விஸ்வரூபம்-2வுக்கு பிரச்சனை வந்தால் எதற்கும் தயார் ; கமல் அறைகூவல்.!


மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே கமலின் விஸ்வரூபம் 2, வரும் ஆக-10ஆம் தேதி ரிலீஸாகிறது. அதுமட்டுமல்ல உலகம் முழுதும் அதிகமான தியேட்டர்களில் ரிலீஸாகிறது. அமெரிக்காவில் ஒரு ஹாலிவுட் படம் எவ்வளவு தியேட்டர்களில் வெளியாகுமோ, அதற்கு நிகராக இந்தப்படத்தை ரிலீஸ் செய்கிறார் கமல்.

விஸ்வரூபம் படம் பல பிரசனைகளை சந்தித்து, பலா தடைகளை தாண்டித்தான் வெளியானது. இந்தப்படத்திற்கு அப்படி ஒரு எதிர்ப்பு வந்தால்..? “விஸ்வரூபம் 2 பட ட்ரெய்லரை ரிலீஸ் செய்த கமல் இதற்கும் விடை சொல்லிவிட்டார்,,

“விஸ்வரூபம் 2 படத்திற்கு எதிர்ப்பு வராது என்று நினைக்கிறேன். அரசியல் என்ற பெயரில் இல்லாமல் வேறு ஒரு பெயரில் உருமாறி வந்த எதிர்ப்பு அது. ஒருவேளை விஸ்வரூபம் 2 படத்திற்கு எதிர்ப்பு வந்தால் அதை எதிர்கொள்ள ஒரு அரசியல்வாதியாக இப்போது நான் தயாராகிவிட்டேன். சினிமாவையும், அரசியலையும் ஒன்றாக்கி குழப்பி கொள்ள கூடாது. படம் வரும் போது படம், அரசியல் வரும் போது அரசியல்.என கூறியுள்ளார் கமல்.