தமிழில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ ‘வாலிராஜா’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் டாக்டர் சேதுராமன். இவர் எம்.பி.பி.எஸ்., எம்.டி படித்த தோல் சிகிச்சை நிபுணர். இவர் மும்பையிலும், சிங்கப்பூரிலும் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சியை பெற்றுள்ளார்.
இந்நிலையில் நடிகர் சேது ராமன் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட நடிகர் சந்தானம் டாக்டர் சேதுராமனின் உடலை சுமந்து சென்றார். டாக்டர் சேதுராமன் உம் நடிகர் சந்தானமும் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சேதுராமனின் மறைவு திரையுலகினர் கவலையில் ஆழ்த்தியுள்ளது.