சமீக காலமாக நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் பரபரப்பாக தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் ரஜினியின் அரசியல் வருகை பற்றி கிண்டலாக கருத்து கூறியிருந்தார். அதற்கு பல பக்கம் இருந்து கண்டனம் வரவே அப்போதைக்கு வாயை மூடிகொண்டார்.
சில நாட்கள் கழித்து இப்போது மீண்டும் தனது சேட்டையை தொடங்கியுள்ளார்.. இப்போதைய அவரது கிண்டல் டார்கெட் திமுக் மீதும் மு.க.ஸ்டாலின் மீதும் திரும்பி இருக்கிறது. தமிழகத்தில் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் குறித்து நடிகை கஸ்தூரி டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதில் அவர், திமுகவினரின் போராட்டம் குறித்து, “ரோட்டுல மறியல். யார் அப்பன் வீட்டு காசுனு கோஷம். எல்லாம் பழக்க தோஷம். அடுத்தவாரிசுகள்” என்று கருத்து பதிவிட்டிருந்தார். இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் உடனே அதை வாபஸ் வாங்கிவிட்டு சைலன்ட் ஆவார் என பார்த்தால் அதற்கும் இன்னொரு நக்கல் பதில் அளித்துள்ளார் கஸ்தூரி..
அதாவது “அப்பன் வீட்டு காசை பற்றி பேச முழு அருகதை உள்ளவர்களை நையாண்டி செய்தது தப்புத்தான்” என்று பதிவிட்டுள்ளார். கஸ்தூரியை யாரோ அதிமுகவினர் பின்னிருந்து இயக்குவதாகத்தான் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.