வரும் ஜனவரி-12ஆம் தேதி விஜய் நடித்துள்ள ‘பைரவா’ படம் ரிலீஸாவது உறுதியாகிவிட்டது.வழக்கத்தைவிட கொஞ்சம் அதிகமாவே பணம் கொடுத்து தான் கேரளாவில் வெளியிடும் உரிமையை வாங்கியுள்ளார்களாம். தற்போது கேரளாவில் மலையாள திரைப்படங்களை திரையிடுவதில் சிக்கல் நீடிப்பதால் மற்ற மொழிப்படங்கள் வெளியாவதற்கு சாதகமான சூழல் அதிகரித்துள்ளது.
அதனால் விஜய் ரசிகர்கள் அதிகமுள்ள கேரளாவில் ‘பைரவா’ படத்தை முன்னைவிட அதிக தியேட்டர்களில் வெளியிட ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கிறதாம்..
இப்படி ‘பைரவா’ படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே தயாரிப்பாளர்கள்-தியேட்டர் அதிபர்கள் பேச்சுவார்த்தையை சுமுகமாக முடிக்கவிடாமல் வேண்டுமென்றே இழுத்து வருகிறாராம் தயாரிப்பாளர் சங்க தலைவரான சுரேஷ்.. சந்தேகமே வேண்டாம்..இந்த சுரேஷ்.. ‘பைரவா’ படத்தின் ஹீரோயின் கீர்த்தி சுரேஷின் தந்தையே தான்.. இப்போது புரிகிறதா ஸ்ட்ரைக் நீடிப்பதன் மர்மம்..!