அனுஷ்காவை பார்த்து பயந்துபோன கீர்த்தி சுரேஷ் ; சங்கடத்தில் படக்குழுவினர்..!


தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் ‘மகாநதி’ என்ற சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் சாவித்ரி கேரக்டரில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷை உடல் எடை கூட்ட சொன்னார்கள் படக்குழுவினர். ஆனால் கீர்த்தி இதற்கு நோ சொல்லிவிட்டாராம். அதற்கு பின்னணியில் ஒரு காரணமும் இருக்கிறதாம்.

‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக நடிகை அனுஷ்கா தன்னுடைய உடல் எடையை கூட்டினார் அல்லவா.? பின்னர் நடித்த ‘பாகுபலி3 படத்தில் உடல் எடையை குறைக்க முடியாமல் கஷ்டப்பட்டார். அதனால் தான் தனக்கும் அப்படிப்பட்ட ஒரு நிலை வந்துவிட கூடாது என கட் அன்ட் ரைட்டாக நோ சொலி விட்டாராம் கீர்த்தி சுரேஷ்.

பாகுபலியில் வேறுவழியின்றி பல கோடி ரூபாய் செலவில் நடிகை அனுஷ்காவை கிராபிக்ஸ் மூலம் ஒல்லியாக காண்பித்தார் ராஜமௌலி. அதேபோல ரங்காஸ்தலம் படத்திலும் கீர்த்தி சுரேஷை கிராபிக்ஸ் மூலம் சற்று உடல் எடை கூட்டியது போல காண்பிக்க இருக்கிறார்களாம்.