நடிகையர் திலகமாக மாறிய கீர்த்தி சுரேஷ் ; சங்கடத்தில் சமந்தா..!


நடிகைகளை பொறுத்தவரை இவரை மாதிரி நடிக்க முடியுமா என்றோ அல்லது இவரைப்போலத்தான் ஆகவேண்டும் என்றோ எல்லோரும் கோரசாக சொல்வது மறைந்த நடிகையர் திலகம் சாவித்திரியை மட்டும் தான். அந்த அளவுக்கு நடிப்பிற்கு இலக்கணம் வகுத்த அவரது வாழ்க்கை வரலாற்றை ‘நடிகையர் திலகம்’ என்கிற பெயரிலேயே படமாக்க இருக்கிறார்கள்..

நாக் அஷ்வின் இயக்கத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. படத்தில் நடிகையர் திலகமாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, சமந்தா முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். இதில் நேற்றுவந்த கீர்த்தி சுரேஷுக்கு சாவித்திரி வேடமா, எங்கள் சமந்தா எந்தவிதத்தில் குறைந்துபோய்விட்டார் என சமந்தாவின் ரசிக கண்மணிகள் டிவிட்டர், பேஸ்புக்கில் சரக்கு அடிக்காத குறையாக கச்சைகட்டி வருகின்றனர்.. எல்லாம் தெரிந்துதானே நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.. அட போங்கப்பா என்கிறார்கள் மற்றவர்கள்.