வாய்ப்பு இல்லாததால் சீரியலுக்கு தாவிய மாஜி நடிகை வாரிசு..!


ஒரு காலத்தில் சினிமாவில் நிற்க நேரமில்லாமல் நடித்துக்கொண்டே இருந்தவர்கள் அம்பிகா-ராதா சகோதரிகள்.. ஆனால் இன்று ராதாவின் வாரிசுகள் என்கிற லேபிளுடன் கதாநாயகிகளாக அறிமுகமான அவரது இரண்டு மகள்களும் நேரத்தை போக்க என்ன செய்வது என தெரியாமல் வீட்டில் இருகின்றனர்..

அதிலும் கோ, புறம்போக்கு படங்களில் நடித்து தற்போது படவாய்ப்பில்லாமல் வீட்டில் இருக்கும் கார்த்திகா தான் ரொம்பவே நொந்துபோய் கிடக்கிறார். தான் ஒரு பெரிய ரவுண்டு வருவோம் என தனது அழகு (!?) குறித்து கர்வம் கொண்டிருந்த அவரால் இந்த அடியை ஜீரணிக்க முடியவில்லை.

தற்போது அவருக்கு ஆறுதல் தருவதுபோல இந்தியில் உருவாகும் சரித்திர சீரியல் ஒன்றில் முக்கியமான வேடம் .கிடைத்துள்ளது.. இதைவைத்து கொஞ்ச நாட்கள் வண்டியை ஓட்டுவோம் என திருப்திப்பட்டு கொண்டுள்ளாராம் இந்த அன்னக்கொடி நடிகை.