கடந்த வெள்ளியன்று (ஆக-17) நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருகிறது. இந்தநிலையில் இந்த வாரம் (ஆக-24) விஜய் டைரக்சனில் பிரபுதேவா நடித்த லக்ஷ்மி படம் வெளியானது.
விஜய்-பிரபுதேவா காம்பினேஷனில் வெளியான படம் என்பதால் கூட்ட கட்டுக்கடங்காமல் வரும் என நினைத்த சில தியேட்டர்காரர்கள் கோலமாவு கோகிலாவை சின்ன தியேட்டர்களில் மாற்றவிட்டு பெரிய அரங்குகளில் லக்ஷ்மியை ரிலீஸ் செய்தனராம்..
ஆனால் முதல் இரண்டு காட்சிகளிலேயே லக்ஷ்மியின் நிலைமை பல்லை இளித்துவிட, சின்ன தியேட்டர்களில் போட்டாலும் கோலமாவு வழக்கம்போல ரசிகர்கள் கூட்டத்துடன் நல்ல கலெக்சனையே பெற்று வந்தது..
இதனால் அதிர்ச்சியான தியேட்டர்காரர்கள் படக்கென லக்ஷ்மியை சின்ன திரையரங்குகளுக்கு தள்ளிவிட்டு கோகிலாவுக்கு மீண்டும் பெரிய ஸ்கிரீன் கொடுத்து வரவேற்பளித்துள்ளனர்.