அதர்வா நடித்து வெற்றிகரமாக (!) ஓடிக்கொண்டு இருக்கும் ‘ஈட்டி’ படத்தின் சக்சஸ் மீட் இரண்டு தினங்களுக்கு முன் நடைபெற்றது.. இதில் படம் சம்பந்தப்பட்ட அனைவரும் ஆஜரானாலும் நாயகி ஸ்ரீதிவ்யா மட்டும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.. அவருக்கும் தயாரிப்பாளர் தரப்புக்கும் ஏதாவது மனக்கசப்பா என்றுகூட பேச்சுக்கள் எழுந்தன.
ஆனால் விசாரித்ததில் அன்றைய தினம் ஸ்ரீதிவ்யா ராஜபாளையத்தில் விஷாலுடன் ‘மருது’ படப்பிடிப்பில் நடித்துக்கொண்டு இருந்தாராம். ‘ஈட்டி’ படத்தின் சக்சஸ் மீட் பற்றி நாயகன் விஷாலிடம் சொல்ல, அவரோ படத்தின் இயக்குனர் குட்டிப்புலி முத்தையாவை நோக்கி கைகாட்டினாராம். ஆனால் முத்தையாவோ படப்பிடிப்பு தான் முக்கியம் என லீவு கொடுக்க மறுத்துவிட்டாராம்.