இரண்டு மாதங்களுக்கு முன் நடிகை லட்சுமி மேனன் பெயரில் ஆபாச வீடியோ ஒன்று இணையதளங்களிலும் வாட்ஸ் அப்களிலும் வைரலாக பரவியது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். இதனால் வழக்கம்போல திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டதும் உண்மைதான். வீடியோவில் இருப்பது லட்சுமிமேனன் தானா அல்லது மார்பிங், செய்யப்பட்ட போலி படமா என்கிற விவாதங்களும் நடந்தன.
இந்த படம் குறித்து லட்சுமிமேனன் விளக்கம் சொல்லும்போது இது யாரோ தனக்கெதிராக செய்த சதி என்றெல்லாம் அப்போது ஆவேசமாக குறிப்பிட்டார். அதே லட்சுமி மேனன், இப்போது பக்குவப்பட்ட நிலையை அடைந்து விட்டாரா அல்லது அந்த வீடியோ பற்றிய தொடர் கேள்விகளால் நொந்து போய்விட்டாரா என தெரியவில்லை.
இப்போது இப்படி வாட்ஸ் அப்பில் பரவும் நடிகைகளின் வீடியோக்கள், புகைப்படங்கள் பற்றி நிருபர்கள் யாராவது அவரிடம் கேட்டால், “மார்பிங் செய்யப்பட வீடியோக்கள் தானே.. பார்த்தால் பார்த்துவிட்டு போகட்டும்.. ஏன்னா அதில் இருப்பது நான் இல்லையே” என கூலாக சொல்கிறாராம்.
இதே லட்சுமி மேனனிடம் பெண்கள் அடிக்கடி பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகிறார்களே இதுபற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டால், கருத்து சொல்லும் வயது எனக்கு இல்லை, இருந்தாலும் இப்படி நடப்பதை நம்மால் வேடிக்கைதான் பார்க்க முடியுமே தவிர, என்ன செய்ய முடியும்.. நம் நாட்டு சட்டங்கள் கடுமையானதாக இல்லை. அதுவரை இப்படி நடப்பதை தடுக்க முடியும் என தோன்றவில்லை என்று சொல்லியிருக்கிறார்.
பொங்கவில்லை.. கொந்தளிக்கவில்லை.. இந்த சின்னவயதில் தான் லட்சுவுக்கு எத்தனை பக்குவம் பாருங்கள்..!