தொலைத்ததை தொலைத்த இடத்திலேயே தேடும் லிங்குசாமி..!


கொஞ்சமா ஓவராத்தான் அகலக்கால் வைத்துவிட்டோமோ என்கிற பீலிங் ‘அஞ்சான்’ படம் பிளாப் ஆனபோது கூட வந்திருக்காது.. ஆனால் ‘உத்தம வில்லன்’ படத்தின் வசூல் ரிப்போர்ட்டை பார்த்ததும் நிச்சயமாக இயக்குனர் இல்லையில்லை.. ஒரு தயாரிப்பாளராக லிங்குசாமிக்கு தோன்றி இருக்கும்..

தற்போது மிகுந்த சிரமத்துக்கு இடையே தங்களது தயாரிப்பான ரஜினி முருகன்’ படத்தை ரிலீஸ் செய்த லிங்குசாமிக்கு படம் நன்றாக ஓடுவதும் நல்ல வசூல் ரிப்போர்ட் வருவதும் அந்த காயங்களுக்கு மருந்து பூசும் விதமாக அமைந்துள்ளது… ஆனால் இதுமட்டும் முந்தைய கடன் கப்பிகளை அடைக்க போதாதே..

அடுத்து அவர் விஷாலை வைத்து சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப்போவதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் தற்போது லேட்டஸ்ட் தகவலாக கமல் படத்தை இயக்கப்போகிறார் என்கிற செய்தி கசிந்துள்ளது.. ஆனால் அந்தப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கவில்லையாம்.. ஒன்லி டைரக்சன் மட்டும் தானாம்.

இதற்காக லிங்குசாமிக்கு வலுவான ஒரு தொகையை சம்பளமாக, புதிய தயாரிப்பாளரிடம் கமல் பேசி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. லிங்குசாமிக்கு தான் செய்த உத்தம வில்லத்தனத்துக்கு கமல் பரிகாரம் பண்ணுகிறார் என்பதை வி,ட தொலைத்ததை தொலைத்த இடத்திலேயே தேடுகிறார் லிங்குசாமி என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்..