கவிப்பேரரசு சினிமா விழாக்களுக்கு வருவது அரிதிலும் அரிதான ஒன்று.. ஆனால் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற சூர்யா நடித்த ‘24’ படத்தின் இசைவெளியீட்டுக்கு வந்தார் என்றால் அதற்கு முக்கிய காரணம் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் என்பதும் வரும் கூட அந்த விழாவிற்கு வந்திருந்தார் என்பதாலும் தான்.
வைரமுத்து மேடையில் பேசும் முறி வந்தபோது சூர்யாவையும் ஏ.ஆர்.ரஹ்மானையும் படத்தின் இயக்குனர் விக்ரம் கே.குமாரையும் நன்றாக பாராட்டி பேசினார்.. ஆனால் விக்ரம் குமாரை பற்றி பேசும் தருணத்தில், அவரோ தன பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த நபருடன் ஏதோ சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருந்தார்..
இதை கவனித்த வைரமுத்து, “விக்ரம் உங்களைத்தான்” என கூப்பிட சட்டென அலர்ட்டான விக்ரம் குமார் உடனே எழுந்து நின்றார்.. உடனே அவரை அமரச்சொன்ன வைரமுத்து, “பொதுவாக மேடையில் பேசும்போது யாரைப்பற்றி பாராட்டி பேசுகிறோமோ அவர்கள் அந்த வார்த்தைகளை கவனிக்கவேண்டும் என எதிர்பார்ப்பது கவிஞனின் ஆசை” என விழாவை கவனிக்கும்படி லைட்டாக சூடு காட்டினர்.