தனுஷ் தயாரித்த நானும் ரௌடி தான் மற்றும் விசாரணை படங்களை தமிழகத்தில் லைக்கா நிறுவனம் தான் வெளியீடு செய்தது. அடுத்ததாக துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்துவந்த கொடி படத்தையும் லைக்கா நிறுவனம் தான் வெளியிட இருப்பதாக் சொல்லப்பட்டு வந்தது.
ஆனால் லைக்கா தரப்பு தற்போது இத்தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளது. அந்த அளவுக்கு இரு தரப்பினருக்கும் நடுவில் என்ன நடந்தது என தெரியவில்லை. இதனால் தனுஷ் அப்செட்டில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. டபுள் ஆக்சனில் நடிக்கும் இரண்டு தனுஷ்களில் ஒருவருக்கு ஜோடியாக த்ரிஷா நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்..