கத்தி படம் மூலம் தமிழ்சினிமாவில் கால் பதித்த லைக்கா நிறுவனம், அடுத்ததாக ஷங்கர் டைரக்சனில் சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து எந்திரன் இரண்டாம் பாகமாக தயாராகும் ‘2.O’ படத்தை தயாரிப்பதன் மூலம் பிரமாண்டமாக அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி இருக்கிறது.
கிட்டத்தட்ட 35௦ கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்தப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக, அதேசமயம் ரஜினிக்கு இணையான வேடத்தில் நடிக்கிறார் பாலிவுட் நடிகர் அக்சய் குமார்.. கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்கிறார்.
படங்களை தயாரிப்பதில் மட்டும் பிரமாண்டம் காட்டாமல், சமீபத்தில் பெய்த பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் மக்களுக்கு உதவும் பொருட்டு, முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு தங்களது லைக்கா நிறுவனம் சார்பாக 5 கோடி ரூபாய் வழங்கியுள்ளார் சுபாஷ்கரன் அல்லிராஜா.
இன்னொரு சிறப்பு தகவலாக ஆந்திரா மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் 15௦வது படமாக விஜய் நடித்துள்ள கத்தி படத்தின் ரீமேக்கையும் சிரஞ்சீவியின் மகன் ராம்சரணுடன் இணைந்து இந்த லைக்கா நிறுவனம் தான் தயாரிக்கிறது.