நீண்ட நாளைக்குப்பிறகு மாதவன் தமிழ்சினிமாவில் ‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலமாக தலைகாட்ட இருக்கிறார்.. இந்தப்படத்தில் குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்துள்ளார் மாதவன்.. படத்தை இயக்கியுள்ளவர் ஏற்கனவே விஷ்ணு நடித்த ‘துரோகி’ படத்தை இயக்கிய சுதா கோங்கரா தான்..
இந்தப்படத்தின் கதாநாயகி ரித்திகா உண்மையிலேயே பாக்ஸிங் சாம்பியன்.. வடக்கத்திப்பெண்.. இவருக்கு குத்துச்சண்டை கற்றுத்தருவது போன்ற காட்சிகளுக்காக மாதவன் உண்மையிலேயே பாக்ஸிங் ட்ரெய்னிங் எல்லாம் எடுத்துள்ளாராம்.
சும்மா சண்டை போடுற மாதிரி நடிக்கிற ஹீரோயின் என்றால் ஒகே.. இவர் உண்மையிலேயே குத்துச்சண்டை தெரிந்தவர்.. அப்படியானால் மாதவனுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏதாவது கிடைத்திருக்குமே என அவர் வாயை கிளறினால், “அட அதை ஏங்க கேட்கிறீங்க.. எங்க… சும்மா குத்து பார்க்கலாம்னு, நான் என் ஹீரோயிசத்தை காட்டுனேன்.. அந்தப்பொண்ணு ஒரு குத்து விட்டதுல என் பல்லு ஒண்ணு காணாம போச்சு” என தனது பகீர் அனுபவத்தை சொல்கிறார் மிரட்சியுடன்.. படத்துல இந்தப்பொண்ணு தனுஷ் ரசிகையா நடிச்சுருக்காம்.