சினிமா மேடைகளில் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக பேசும் பிரபலங்களில் முதல் இரு இடத்தில் இருப்பவர்கள் ராதாரவியும் மன்சூர் அலிகானும் தான்.. நாம் சொல்லப்போகும் விஷயம் மன்சூர் அலிகான் பேசியது பற்றித்தான். ஜி.வி.பிரகாஷ், அர்த்தனா நடித்துள்ள ‘செம’ படத்தில் கதாநாயகியின் தந்தையாக கோவை சரளாவின் கணவராக நடித்துள்ளார் மன்சூர் அலிகான்..
இந்தப்படத்தை இயக்குனர் பாண்டிராஜின் சீடரான வள்ளிகாந்த் இயக்கியுள்ளார். படத்தை பாண்டிராஜே தயாரித்துள்ளார். வள்ளிகாந்தை பொறுத்தவரை, ஒவ்வொரு காட்சியும் தான் நினைத்தபடி சிறப்பாக வரவேண்டும் என பர்பெக்சன் பார்ப்பாராம்.. அவருக்கு ரீடேக் வள்ளிகாந்த் என்றே பெயர் இருக்கிறதாம்.
அப்படித்தான் மன்சூர் அலிகானையும் பல காட்சிகளில் ரீடேக் பண்ண வைத்தாராம் வள்ளிகாந்த்.. இதுபற்றி சமீபத்தில் நடைபெற்ற ‘செம’ படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் பேசிய மன்சூர் அலிகான், “எப்பா.. இந்த வள்ளிகாந்த் லேசுல திருப்திப்படமட்டார்.. ரீடேக் ரீடேக்னு என்னை பாடா படுத்திட்டார்.. இன்னும் இவருக்கு கல்யாணம் ஆகலை.. பாவம் இவரை கட்டிக்கப்போறவ.. பர்ஸ்ட்நைட்ல திருப்தி வரலைன்னு எத்தனை டேக் எடுக்கப்போறாரோ தெரியல” என்று ஓப்பனாகவே பேச, இயக்குனரின் முகத்தில் வெட்கத்துடன் சேர்த்து அசடும் வழிந்தது.
அதுசரி.. அதுக்காக மன்சூர் அலிகான் இப்படியெல்லாம் பொதுமேடையில் பச்சையாக பேசலாமா என்ன..?