“சட்டாம்பிள்ளைத்தனம் பண்றியா..? ; தமிழிசையை வெளுத்து வாங்கிய மன்சூர் அலிகான்..!


விஜய்யின் மெர்சல் படம் வெளியானதும் இந்தமுறை பிரச்சனைக்கு திரி கொளுத்தியவர் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன். மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி வரி குறித்து தவறாக சொல்லி பிரதமர் மோடி மற்றும் பாஜக மீது மக்களிடம் தவறான என்னத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.. சம்பந்தப்பட்ட அந்த காட்சிகளை நீக்கவேண்டும் என கொந்தளித்தார்.

தமிழிசையின் இந்த பேச்சுக்கு ரசிகர்களும் திரையுலகை சேர்ந்தவர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்தநிலையில் எதையும் தைரியமாக விமர்சிக்கும் மன்சூர் அலிகான், “என்ன.. தமிழிசையை பார்த்து சட்டாம்பிள்ளைத்தனம் பண்றியா..? உங்க அப்பாவுக்குன்னு நல்ல பேரு இருக்கு.. அது கெடுத்துறாத” என தனது பாணியில் வெளுத்து வாங்கியுள்ளார்.