நடிகைகளில் அனுஷ்காவை லேடி கமல் என்று அழைத்தால், நயன்தாராவை லேடி அஜித் என்று அழைக்கலாம். காரணம் அனுஷ்கா படத்துக்குப்படம், கமல் போல விதவிதமான கெட்டப்புகளில் அசத்துகிறார். நயன்தாராவோ, அஜித் பாணியில் தான் நடிக்கும் படத்தின் எந்த ஒரு புரமோஷன் நிகழ்ச்சியிலும் விழாவிலும் கலந்துகொள்ளாமல் டிமிக்கி கொடுக்கிறார்..
தனி ஒருவன், மாயா என கடந்த ஒரு மாதத்திற்குள் நயன்தாரா நடித்த இரண்டு படங்கள் வெளியாகின. இரண்டு படங்களும் நல்ல வெற்றி பெற்றுள்ளன. ஆனால் இரண்டு படங்களின் இசைவெளியீட்டு விழாவுக்கும் நயன்தாரா வரவில்லை.. இரண்டு படங்களின் வெற்றி சந்திப்பிலும் நயன்தாரா ஆப்சென்ட் தான்.
குறிப்பாக நேற்று சென்னையில் ‘மாயா’ படத்தின் சக்சஸ் மீட்டை படக்குழுவினர் பத்திரிகையாளர்களுடன் கொண்டாடிய அதேவேளையில், அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல, சேலத்தில் நடைபெற்ற துணிக்கடை திறப்பு விழாவில் கலந்துகொண்டு கணிசமாக கல்லா கட்டிவிட்டார் நயன்தாரா.. ம்ம். இது நயன்தாராவின் நேரம்.. வேறென்ன சொல்வது..?