‘கருப்பசாமி குத்தகைதாரர்’ படம் மூலமாக தமிழ்சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை மீனாட்சி.. நல்ல நடிகை என்கிற பெயரை எடுத்த மீனாட்சி, சமீபத்தில் நேர்முகம் என்கிற படப்பிடிப்பில் காரணமே இல்லாமல் ஒரு உதவி இயக்குனரை கைநீட்டி அறைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கலைக்கு மொழி பேதம் கிடையாது என்றாலும் கூட, கொல்கத்தாவில் இருந்து இங்கே பஞ்சம் பிழைக்க வந்து தமிழ்ப்படங்களில் நடித்து வண்டியை ஒட்டிக்கொண்டு இருக்கும் நடிகை ஒரு தமிழ் டெக்னீசியனை கைநீட்டி அடிக்கும் தைரியம் இவருக்கு எப்படி வந்தது..? அப்படி என்ன தவறு செய்தார் அந்த உதவி இயக்குனர்..?
ஷாட் ரெடி என மீனாட்சியை அழைக்க சென்றபோது அவரது கேரவனில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் கேனில் இருந்து தண்ணீரை பிடித்து குடித்ததால் கோபத்தில் கைநீட்டி விட்டாராம் மீனாட்சி.. மற்றவர்கள் காரணம் கேட்டதற்கு பதில் சொல்லாமல் அலட்சியம் காட்டினாராம். மன்னிப்பு கேட்கவும் மறுத்துவிட்டாராம்.
நம்ம ஆட்கள் என்ன சொம்பைகளா..? மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தால் தான் வெளியேற முடியும் என ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த ஒரு அறையில் மீனாட்சியை சிறை வைத்து விட்டார்கள். வேறு வழியின்றி “நான் அடித்தது தவறுதான்.. இனிமேல் இதுபோன்று நிகழாது” என மன்னிப்பு கடிதம் எழுதிகொடுத்தபின் தான் அவரை விடுவித்துள்ளார்கள்..
அராஜகமாக நடந்துகொள்ளும் மற்ற நடிகைகளுக்கு இது ஒரு பாடம்.