“G மைம்” ஸ்டுடியோவின் நிர்வாக இயக்குனர் மைம் கோபி . மைம் கலையை உயிர் முச்சாக கொண்டு அக்கலையை வளரும் இளைய தலைமுறைக்கு கொண்டு சென்று அதில் வெற்றியையும் கண்டு வருபவர் .சினிமாவுக்குரிய நடிப்பு பயிற்ச்சியையும் கற்ப்பித்து வருபவர் .
தான் மட்டுமே சமுதாயத்தில் மேலோங்கி இருக்க வேண்டும் என்ற மனிதர்களுக்கு மத்தியில் ஆதரவற்ற, நலிந்த ஊனமுற்ற குழந்தைகளுக்கு அவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் கடந்த இரண்டு வருடமாக “மா ” என்ற நிகழ்ச்சியை நடத்தி இந்த தெய்வ குழ்ந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றார் .
இந்த நிகழ்ச்சியில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு துறைகளில் பணியாற்ற்றுபவர்கள் இக்குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர் .
சென்னை காமராஜர் அரங்கத்தில் நவம்பர் 16 தியதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது பிரத்யேகமாக” மா “என்ற நிகழ்ச்சி பார்வையாளர்களை கண் கலங்க வைத்தது , இயக்குனர் பிரபு சாலமன் , பாண்டி ராஜ் , ரஞ்சித் ,பாலாஜி மோகன் , நடிகர் கார்த்தி, காளி , ஜான் விஜய் , அசோக் , கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் . இவ்விழாவில் “அன்பு மலர் “இல்லத்தில் உள்ள 61 குழந்தைகளுக்கு ஒரு ஆண்டிற்கான கல்வித்தொகை வழங்கப்பட்டது ..
யாரேனும் இக்குழந்தைகளுக்கு உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள
“ஜி “மைம் ஸ்டுடியோ
மைம் கோபி -09884032100
அஜித் – 09841236904
கோம்ஸ் -09884500004