மோகன் லால் மருத்துவமனையில் அனுமதி.!

mohan_lal_news

மலையாள சூப்பர் ஸ்டாரான நடிகர் மோகன் லால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மலையாளத்தில் மோகன் லால் நடித்த ஸ்படிகம் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது யானை மீதிருந்து குதிக்கும் காட்சியில் டூப் போடாமல் நடிக்கும்போது தவறுதலாக கீழே குதித்த மோகன் லாலுக்கு காலில் சுலுக்கும் கழுத்து வலியும் ஏற்பட்டது, ஆனால் அப்போது அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத அவர் தற்போது மீண்டும் அதே கால் வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

மோகன் லாலுக்கு டாக்டர் அறிவுரை வழங்கியுள்ளனர். கால் வலி முழுவதுமாக குணமாக வேண்டுமென்றால் காலில் ஒரு சிறிய ஆப்ரேஷன் நடத்த வேண்டும் என்று கூற இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். இப்போது ஆப்ரேஷன் என்று நான் மருத்துவமனையில் படுத்தால் என்னை நம்பி இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்னுடைய படங்களை முடித்துவிட்டு அதன் பிறகு ஆப்ரேஷன் செய்து கொள்கிறேன் என்று கூறிவிட்டாராம். இதற்கு மருத்துவர்களும் ஒப்புதல் அளித்துவிட்டார்களாம், ஆனால் இன்னும் சில தினங்களுக்கு மருத்துவமனையில் தான் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறிவிட்டார்களாம்…