மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய உருவாகியுள்ள படம் மட்டி (Muddy). டாக்டர் பிரகாபால் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படம் இந்தியாவின் முதல் ‘சகதி ரேசிங்’ திரைப்படம் ஆக உருவாகியுள்ளது. அதாவது இதுவரை சாலைகளில் நடைபெற்று பந்தயங்களை தவிர்த்து கரடுமுராடான, சேறும் சகதியும் நிறைந்த சாலைகளில் ஜீப் வாகனங்களுக்கு இடையே நடக்கும் பந்தயத்தை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளது.
ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய கே.ஜி.ரதீஷ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் மற்றும் ரிதான் கிருஷ்ணா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . இப்படம் பல இந்திய மொழிகளில் விரைவில் வெளியாக இருக்கிறது .