சீனியர் நடிகர்களை டென்சனாக்கிய மிஷ்கின் சீடர்..!


என் சர்வீஸ் இருக்காது இந்தப்பையன் வயசு என தாங்கள் நடித்த படம் ஒன்றின் அறிமுக இயக்குனர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்களாம் சீனியர் நடிகர்களான நாசரும் எம்.எஸ்.பாஸ்கரும்.

ஸ்கூல்பையன் போல இருக்கும் அறிமுக இயக்குனர் ஸ்ரீகணேஷ் மற்றும் அதே வயதுள்ள ஒளிப்பதிவாளர் தினேஷ் இருவரும் ‘8 தோட்டாக்கள்’ படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர்..

ஆனால் இதில் நடித்த நாசரையும் எம்.எஸ்.பாஸ்கரையும் வழக்கம்போல அவர்கள் இஷ்டப்படி நடிக்கவிடாமல், அப்படி இல்ல.. இப்படி நடியுங்கள் என நிறைய டேக்குகள் எடுத்து அதிகம் வேலை வாங்கிவிட்டார்களாம். இதனால் ஸ்பாட்டிலேயே எம்.எஸ்.பாஸ்கர் எகிற, அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தாரம் நாசர்.. இந்த ஸ்ரீகணேஷ் இயக்குனர் மிஷ்கினின் சீடர் என்பது குறிப்பிடத்தக்கது.