தேடுதல் ஒரு கலை , நல்ல கதைகளையும் , படங்களையும் தேர்வு செய்து தயாரித்து வெளியிடும் ஜே எஸ் கே பிலிம் corporation நிறுவனமும் , நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்களை தயாரித்த லியோ visions நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் அடுத்த படைப்பான ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ தணிக்கை அதிகாரிகளால் ‘U ‘ சான்றிதழ் கிடைக்க பெற்றது.
அறிமுக இயக்குனர் ஸ்ரீ கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ படத்தில் நாயகனாக அருள்நிதி நடிக்க , அவருக்கு ஜோடியாக நடிப்பவர் ரம்யா நம்பீசன்.
‘ இன்றைய காலக் கட்டத்தில் ‘U ‘ சான்றிதழ் பெறுவது மிக முக்கியம். மிகவும் மகிழ்ச்சிகரமானதும் கூட. எங்களுடைய லட்சியமே எல்லா தரப்பு மக்களையும் சென்று அடையும் வகையில் படங்களை தயாரிக்க வேண்டும் என்பதுதான்.அருள் நிதி இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அபாரமான துடிப்பான நடிப்பை அவர் வெளிபடுத்தி இருக்கிறார். அவருக்கு இணையாக நடிப்பவர் ரம்யா நம்பீசன்.
சிங்கம் புலியும் , நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் பகவதி பெருமாளும் மிக சிறந்தக் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.’நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ ரசிகர்கள் இடையே சிரிப்பு வெடி வெடிக்க செய்யும்.பொங்கலன்று ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ படத்தின் முன்னோட்டம் வெளியாகும்.