நடிகர்சங்க தேர்தல் பிரச்சரத்தின்போதே தனி மனித தாக்குதல் எதுவும் நடத்தாமல் நாகரிகமாக வார்த்தைகளை பயன்படுத்தியவர் நாசர். அவர் இப்படி பேசலாமா என்றுதான் கோலிவுட்டில் பலரும் அங்கலாய்த்து கிடக்கிறார்கள்.. சமீபத்தில் ரஜினியைப்பற்றி தேவையில்லாமல் நாசர் வார்த்தையை விட்டதாகத்தான் பலரும் சொல்கிறார்கள்..
புதிதாக பொறுப்புக்கு வருபவர்கள், தென்னிந்திய நடிகர்சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர்சங்கம் என மாற்றிவிடுங்கள் என நடிகர்சங்க தேர்தல் நடந்தபோது, ரஜினி வேண்டுகோள் வைத்தார். பதிலுக்கு கமல் இந்திய நடிகர்சங்கம் என பெயர் வைக்கலாம் என தன் பங்குக்குக்கு சொல்லிவிட்டு போக, தேர்தல் தினம் முழுவதும் இந்த கேள்விகளால் பற்றி எரிந்தது.
சரி இப்போது நாசர் அணி பொறுப்புக்கு வந்தவிட்டது.. அதையடுத்து பேசியுள்ள நாசர், பேச்சுவாக்கில் நடிகர் ரஜினியைவிட எனக்கு ஒரு சதவீதமாவது தமிழ்ப்பற்று அதிகம் உள்ளது என கூறினார். அவரது தமிழ்ப்பற்றை இங்கு யாரும் சந்தேகப்படவில்லையே.. பின் தேவையில்லாமல் எதற்கு இப்படி வார்த்தையை விட்டார்,
ரஜினி சொன்னது, இனிமேல் மொழியை வைத்து சண்டை வேண்டாமே என்கிற ஒரு நல்லெண்ணத்தின் அடிப்படையில் தான்.. இத்தனைக்கு அவர் தமிழ்நாடு நடிகர் சங்கம் என்றுதானே மாற்றச்சொன்னார்.. இதுவே அவர் இந்திய நடிகர் சங்கமாக மாற்றுங்கள் என சொல்லியிருந்தால் அன்றைய தினம் ஒரு பிரளயமே வெடித்திருக்கும்.. சொன்னது கமல் என்பதால் அதை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்கள்..
நாசரை பொறுத்தவரை, தேர்தலின்போது கமல் வெளிப்படையாக ஆதரவு தந்தது போல ரஜினி எதுவும் அறிவிக்காதது அவருக்கு அப்போதே வருத்தத்தை தந்தது. அதற்கு ஒரு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் ரஜினியை, இந்த இடத்தில் மட்டம் தட்டும் விதமாக பேசியுள்ளார் என்றே பலரும் சொல்கிறார்கள்..