கரு பழனியப்பனை விட்டு வெளுத்த நட்டி நடராஜ்!


கொஞ்ச நாட்களாகவே ரஜினிகாந்தின் அரசியல் வருகையை கடுமையாக விமர்சித்து வருகிறார் இயக்குநர் கரு.பழனியப்பன். அதுவும் தன்னை ரஜினி ரசிகன் என்று சொல்லிக் கொண்டே ரஜினியைத் திட்டியிருந்தார். இதற்கு சமூக வலைத் தளங்களில் கடுமையான எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளார் பழனியப்பன். சக சினிமா கலைஞர்களும் அவரது பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில்தான் ட்விட்டரில் கரு பழனியப்பனை சும்மா வெளுத்து வாங்கியுள்ளார் நடிகர் நட்டி நடராஜ். தமிழில் மிளகாய், சதுரங்க வேட்டை, எங்கிட்ட மோதாதே போன்ற படங்களில் நடித்தவர் நட்டி நடராஜ் எனும் நடராஜ் சுப்பிரமணியம். பாலிவுட்டில் மிகப் பெரிய ஒளிப்பதிவாளர். தனது முதல் படத்திலேயே ரஜினியின் சாயலில் ஸ்டைலான நடிப்பல ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் தான் இந்த நட்டி.. அதுமட்டுமல்ல. ஒரு படத்தில் படம் முழுக்க ரஜினி ரசிகராகவே வாழ்ந்திருந்தார்.

அப்படிப்பட்ட நட்டி கரு.பழனியப்பன் குறித்து என்ன கூறியுள்ளார் தெரியுமா..? “கூடப்பிறந்த அண்ணன் தம்பிக்கு என்ன பண்ணிருக்க… எத்தனை பேருக்கு பீஸ் கட்டி இருக்க … எத்தன பேருக்கு சாப்பாடு போடறே.. பதக்குனு அத சொல்லு…நல்லவன் பேர் சொன்ன நடுங்குதா…? ஏன் ஆகாது… இயற்கை தானே….. ஒரு படங்கூட ஓடாத, தன் தயாரிப்பாளர்களை கடன்காரன் ஆக்கிய கேடு கெட்டவன்லாம் பேசுவானாம்… யார் என்ன பண்ணனும்னு… இதில் இவன் ரசிகனாமாம்!’ என வெளுவெளுவென வெளுத்துள்ளார் நட்டி நடராஜ்.