“ஆண்ட்டினு கூப்பிடாத.. அக்கான்னு சொல்லு” – நான்கு வயது குழந்தைக்கு நயன்தார கண்டிஷன்..!
வெங்கட்பிரபு டைரக்சனில் சூர்யாவுடன் மாஸ் படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார் நயன்தாரா.. இந்தப்படத்தில் படம் முழுவதும் வருகின்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நான்கு வயது குழந்தை ஒன்றும் நடிக்கிறது. படப்பிடிப்பு நடைபெறும் நேரங்களிலோ அல்லது மாற்ற சமயம் நயன்தாராவை பார்த்தாலோ அந்த குழந்தை ‘ஆண்ட்டி’ என செல்லமாக அழைப்பது வழக்கம்.
முதலில் இதை சாதராணமாக எடுத்துக்கொண்ட நயன்தாரா அடிக்கடி அவரை ஆண்ட்டி.. ஆண்ட்டி என்று அழைக்க, முதலில் இதைக் கண்டுகொள்ளாமல் இருந்த நயன்தாரா, படப்பிடிப்பு தளத்தில் வேறு சிலரும் இதேபோல அழைக்கவே, ஒரு கட்டத்தில் டென்சன் ஆகிவிட்டாராம்.
அந்த குழந்தையை அழைத்து இனிமேல் “ஆண்ட்டினு கூப்பிடாத.. அக்கான்னு சொல்லு” என கண்டிப்பாக சொல்லிவிட்டாராம். உடன் நடிக்கும் பிரேம்ஜியும் இதே ரீதியில் கலாய்க்க, குழந்தையையே கண்டித்த நயன்தாரா பிரேம்ஜியை மட்டும் சும்மா விடுவாரா..? லெப்ட் அன்ட் ரைட் பிடித்து வாங்கிவிட்டாராம்.
ஆண்ட்டி என அழைப்பது அவரை மனரீதியாக பாதித்து படப்பிடிப்பில் நடிக்கும்போது தடுமாற வைத்து விடுகிறதாம்.. அதெல்லாம் சரி… நான்கு வயது குழந்தை 32 வயது நயன்தாராவை ஆண்ட்டி என அழைக்காமல் ஆயா என்றா அழைக்கும்.. அக்கா என்பதெல்லாம் கொஞ்சம் ஓவராக இல்லையா என்கிறார்கள் படப்பிடிப்பு குழுவினர்.