சினிமாவில் இருக்கும் நடிகர், நடிகைகளை 3௦ வயதுக்குள் திருமணம் செய்துகொண்டுவிட வேண்டும் என ஒரு சட்டம் கொண்டுவந்துவிட்டால் கூட தேவலைதான். அடாடாடா.. கல்யாணம் பண்ணாமல் வேண்டுமென்றே இவர்கள் இழுத்தடிக்கொண்டு நடத்தும் நாடகங்களை பார்த்தால் ஒருகட்டத்தில் கடுப்புதான் ஏறுது மைலார்ட்.
நயன்தாரா காதல் தோல்வியாலேயே காலம் தள்ளுவது என முடிவு செய்துவிட்டார் போல.. ஆனால் அவரிடம் ஒரு பக்குவம் இருக்கிறது.. அதை பாராட்டியே ஆகவேண்டும். தன முதல் காதலை முறித்து முச்சந்தியில் நிற்கவைத்த சிம்புவுடன் படத்தில் நடிக்க அழைத்தபோது, தட்டிக்கழிக்காமல் தைரியமாக ஒப்புக்கொண்டு நடித்தாரே..
தனது முதல் காதலன் என அவரை பார்க்கவோ, பேசவோ, கட்டிப்பிடித்து நடிக்கவோ அவர் அஞ்சவே இல்லையே. ‘இது நம்ம ஆளு’ பட ஸ்டில்களையும் ட்ரெய்லரையும் பார்த்தால் இது நன்றாக விளங்கும். ஆனால் இவர் அளவுக்கு இன்னும் த்ரிஷாவுக்கு பக்குவம் வரவில்லை என்றே தோன்றுகிறது.
சமீபத்தில் ஆந்திராவில் கமல் தனது ‘சீக்கட்டை ராஜ்ஜியம்’ படத்தின் பிரீமியர் ஷோவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் கலந்துகொண்டு புன்னகைப்பூவே சுற்றிவந்த த்ரிஷா, நடிகார் ராணா நேரெதிரே வந்ததை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். மேலும் பியூஸ் போன பல்பாக த்ரிஷாவின் முகம் சுருங்கியதுடன், ராணாவிடம் எதுவும் பேசாமல் வேறுபக்கம் போய்விட்டார்..
ஏற்கனவே ராணா, த்ரிஷா இருவரும் நட்பு என்கிற போர்வையில் காதல் கிளிகளாக சில வருடங்கள் உலாவந்தவர்கள் தான். ஆனால் நாங்கள் நல்ல நண்பர்கள் என்றுதான் த்ரிஷா சொல்லிவந்தார். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, ராணாவை வெறுப்பேற்றுவதாக நினைத்துக்கொண்டு தயாரிப்பாளர் வருண்மணியனுடன் திருமண நிச்சயதார்த்தம் வரை சென்று பின்னர் காரணம் எதுவும் கூறாமல் அதையும் நிறுத்தினார்.
நல்ல நண்பர்கள் என்று சொன்னால் ராணாவை கண்டதும் த்ரிஷா ஏன் முகத்தை திருப்பிக்கொண்டு செல்லவேண்டும். இல்லை நயன்தாரா போல தனது முதல் காதலனை எந்தவித சலனமும் இன்றி எதிர்கொண்டிருக்கலாமே என்கிறார்கள் இந்த நிகழ்வை அருகில் இருந்து பார்த்த சில பிரபலங்கள் சிலர்.