சினிமாவுக்கு வந்து பத்து வருடம் ஆகிவிட்டது நயன்தாராவுக்கு.. இன்னும் சில இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும், ஏன் சில நடிகர்களும் கூட நயன்தாரா தான் வேண்டுமென பிடிவாதம் பிடிப்பதால் வான்ட்ட்டாக முன்னணி நடிகையாகவே சித்தரிக்கப்பட்டு வருகிறார். ஆனால் இளம் நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும்போது அவரது கிழட்டு தட்டிய முகம் நன்றாகவே பளிச்சிடுகிறது என வெளிபடையாகவே யூனிட்டில் காதுபட பலரும் பேசிக்கொள்கிறார்களாம்.
சரி.. விஷயத்திற்கு வருவோம்.. இப்போது தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க இருக்கும் அவரது 150 படத்தின் கதாநாயகியாக நடிக்க நயன்தாராதான் ஒப்பந்தமாகி இருக்கிறாராம். வழக்கமாக இரண்டு கோடி மட்டுமே சம்பளம் வாங்கிவந்த நயன்தார, இந்தப்படத்திற்காக மூன்று விரல்களை காட்டினாராம்.
ஆனால் இப்போது அவருக்கு பேசப்பட்டு இருப்பதோ நான்கு கோடி ரூபாயாம். அவர் மூன்றுதானே கேட்டார் என்கிறீர்களா..? படத்தில் எக்ஸ்ட்ராவாக பிகினி ட்ரெஸ் போட்டு நடிக்கவேண்டும் என கோரிக்கை வைக்க, கூலாக ஒகே சொன்ன நயன்தாரா எக்ஸ்ட்ராவாக இன்னும் ஒரு விரலை காட்ட, படத்தை தயாரிக்க இருக்கும் லைக்கா நிறுவனமும் மறுபேச்சு இல்லாமல் ஒப்புக்கொண்டு விட்டதாம்.