ஒருகாலத்தில் தி.நகர் முழுவதும் சொத்துக்களாக வாங்கிப்போட்ட நடிகர் தியாகராஜன், தயாரிப்பாளரக மாறியபின்னர், சமீப வருடங்களாக தெலுங்கு, இந்தியில் ஹிட்டாகும் படங்களின் ரீமேக் ரைட்ஸை வளைத்து வளைத்து வாங்கிப்போட்டு வருகிறார்.. இப்போது அவர் கைவசம் ஸ்பெஷல்-26, மற்றும் குயீன் படங்களின் ரீமேக் ரைட்ஸ் ஆகியவை உள்ளன.
இதில் குயீன் படத்தில் இந்தியில் கங்கணா நடித்த கேரக்டரில் நயன்தாராவை எப்படியாவது நடிக்க வைத்துவிட வேண்டும் என தலையால் தண்ணி குடித்து வருகிறார் தியாகராஜன்.. ஏற்கனவே இந்தப்படத்தை தானே இயக்குவதாகவும், பிரசாந்த் ஹீரோவாக நடிப்பதாகவும் தகவலை கசியவிட்டதால், இந்தப்படத்தில் ஹீரோயினாக நடிக்க அழைத்தபோது இந்த தந்தை மகன் கூட்டணியை பார்த்து ஜகா வாங்கினார் நயன்தாரா.
இப்போது இதே கதையை ரேவதி இயக்குகிறார், சுகாசினி திரைக்கதை எழுதுகிறார் என்பது முடிவாகியுள்ளது.. இப்போது நயன்தாரா ஒகே சொல்லிவிடுவார் என ஆவலுடன் எதிர்பார்த்தவர்களுக்கு, கிடைத்தது ஏமாற்றமான பதிலே.. இந்தப்படத்திற்காக மொத்தமாக கால்ஷீட் கேட்க, தன்னால் முடியாது என கூறிய நயன்தாரா, இனி இந்தப்படம் தொடர்பாக தன்னிடம் பேச வரவேண்டாம் என தியாகராஜன் தரப்புக்கு பெரிய கும்பிடு போட்டு அனுப்பிவிட்டாராம்.