அமலாபாலும் ஏ.எல்.விஜய்யும் இன்னும் கொஞ்சநாள் கழித்து திருமணம் செய்துகொள்ளலாம் என தங்கள் காதலை வெளியுலகுக்கு தெரியாமல் மறைத்து காதலித்து வந்ததை, ஒரு விழா மேடையில் வைத்து முதலில் பகிரங்கப்படுத்தியவர் பார்த்திபன் தான். அதன்பின்னர் தான் இனியும் காதலை மறைக்கமுடியாது என விஜய், அமலாபால் இருவரும் காதலித்ததை ஒப்புக்கொண்டு உடனுக்குடன் கல்யாண பத்திரிகையையும் நீட்டினார்கள்.
இப்போது நீண்ட நாட்களாக இயக்குனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் லவ்விக்கொண்டு இருப்பதாக இருவரும் நெருக்கமாக இருந்த சில போட்டோக்கள் வெளியானதால் இதுநாள் வரை பேசப்பட்டு வந்தது. ஆனால் இப்போது இவர்கள் இருவரும் காதலிப்பதை ‘நானும் ரௌடி தான்’ பிரஸ்மீட்டில் சூசகமாக தெரியப்படுத்தியுள்ளார் பார்த்திபன்..
அப்படி என்ன சொல்லியிருக்கிறார்..? “இந்தப்படத்துல தவறுகள் வர்றதுக்கு வாய்ப்பு இல்ல.. காரணம் விக்னேஷ் சிவன் எதையா இருந்தாலும் கரெக்ட் பண்ணிர்றார்.. ஐ மீன் சின்னச்சின்ன தப்பா இருந்தா கூட கரெக்ட் பண்ணிர்றார். பாருங்க நீங்க சிரிச்சு என்னை மாட்டி விடுறீங்க பாருங்க.. இங்கே நான் பேசுற விஷயம் எல்லாம் எல்லோரும் சந்தொசஹப்படுற விஷயம்.. அது கிசுகிசுவா இருந்தா கூட. நமக்கு கிடைக்காதது இன்னோருக்கு கிடைச்சா அதுகூட சந்தோசம் தான்” என விக்னேஷ் சிவனை பார்த்துக்கொண்டே அத்தனையையும் போட்டுடைத்தார்.
சரி, பார்த்திபனுக்கு இது எப்படி தெரியும்..? விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள ‘நானும் ரௌடி தான்’ படத்தின் வில்லனாக நடித்துள்ளவர் பார்த்திபன் தானே.. அவர் கண்ணுக்கு காதல்கிளிகளின் கண் பேசும் பாஷைகள் தப்பிவிடுமா என்ன..? சரி இந்த நேரத்துல எதுக்காக இதை போட்டு உடைச்சிருக்காரு பார்த்திபன்..? வேறெதுக்கு.. வரும் வாரம் ரிலீஸாகும் இந்தப்படத்தின் ஒரு பப்ளிசிட்டிக்காகத்தான்