ரஜினி படத்தை இயக்கும் விக்னேஷ் சிவன் ; நயன்தாரா சிபாரிசு


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் தர்பார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகை நயன்தாராவின் காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து பேசினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. விக்னேஷ் சிவன் தற்போது சிவகார்த்திகேயன் படத்தை இயக்குகிறார். இந்நிலையில் தர்பார் படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை அவர் சந்தித்துள்ளது பல்வேறு ஊகங்களுக்கு வழி வகுத்துள்ளது.

ரஜினி சமீபகாலமாக இளம் தலைமுறை இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். அந்தவகையில் ரஜினியின் அடுத்தப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதற்கான முயற்சியா இது. அல்ல மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டும் தானா என்பது போன்ற பேச்சுக்கள் கோலிவுட்டில் ஆரம்பித்துவிட்டன.நயன்தாராவின் சிபாரிசின் பேரில் ரஜினியிடம் கதை சொல்வதற்காகத்தான் விக்னேஷ் சிவன் மும்பைக்கே வந்துள்ளார் என்றும் சொலபடுகிறது. வழக்கம்போல ‘கத்திரிக்காய் முத்துனா கடைத்தெருவில்’ எனும் பழமொழியை கோலிவுட்காரர்கள் கோடிட்டு காட்டுகிறார்கள்