சமீபத்தில் நயன்தாரா, அதர்வா நடித்த இமைக்கா நொடிகள் படம் வெளியாகி வெற்றிகரமாக ஒடிக்கொண்டு இருக்கிறது. இந்தப்படம் ரிலீஸ் தேதி அன்று தயாரிப்பாளர் ஜெயக்குமார் இந்தப்படத்தை ரிலீஸ் செய்ய ரொம்பவே கஷ்டப்பட்டார்.. அதனாலேயே ரிலீசன்று முதல் இரண்டு காட்சிகள் படம் திரையிடப்படவில்லை.
பின்னர் ஒரு வழியாக மதுரை அன்பு, அபிராமி ராமநாதன் ஆகியோர் கொஞ்சம் பணம் கொடுத்து நெருக்கடியை சமாளிக்க உதவி படத்தை ரிலீஸ் செய்ய உதவினார்கள்.. இதில் நயன்தாராவுக்கு சம்பள பாக்கியாக 75 லட்ச ரூபாய் தரவேண்டி இருந்ததாம். தயாரிப்பாளாரால் சொன்னபடி அதை கொடுக்க முடியவில்லை. நயன்தாராவும் அதை கேட்டு நெருக்கடி கொடுக்கவும் இல்லை.
அதனாலேயே ஓரளவு நிம்மதி பெருமூச்சு விட்டாராம் தயாரிப்பாளர்.