முன்னவருக்கு பச்சை.. பின்னவருக்கு கம்மல் ; நயன்தாராவின் ‘லப்டப்’ டெக்னிக்..!


என்னதான் நம்பர் ஒன நடிகையாக இருந்தாலும் காதல் வயப்பட்டு விட்டால் நயன்தாராவின் மனது கூட சாதாரண பெண்ணைப்போல சின்னச்சின்ன ஆசைகளுக்கு ஏன்க்த்தானே செய்யும்… அதனால் தானே முன்பு பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்டபோது அவரது பெயரை கையில் பச்சை குத்திய நயன்தாரா, அவரது பெயரை கையில் பச்சை குத்தினார்.. ஆனால் அந்த காதல் அழிந்தது.. பச்சை குத்தியது அழியவில்லையே..

இப்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை லவ்விக்கொண்டு இருக்கும் நயன்தாரா. சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியான நயன்தாராவின் ஒரு புகைப்படம் ஒன்றில் காதில் அவர் அணிந்துள்ள மிகவும் சிறிய கம்மல் ‘வி’ என்ற ஆங்கில எழுத்தில் உள்ளது. இப்போது விக்னேஷ் சிவன் உடனான காதலை வெளிப்படுத்த அவரது பெயரின் முதல் எழுத்தை கம்மலாக வைத்திருக்கிறாரோ நயன்தாரா..?