நடிகர் அஜித் தனது வீட்டிலேயே சொந்தமாக டப்பிங் தியேட்டர் கட்டி வருகிறார். டப்பிங் தியேட்டருக்கான பணிகள் அனைத்தும் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இனி வரும் காலங்களில் அஜித் நடிக்கும் அனைத்துப் படங்களின் டப்பிங்கும் இங்கு தான் நடைபெற உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
எதற்காக வீட்டிலேயே டப்பிங் தியேட்டர்?
அஜித் எங்கு சென்றாலும் அங்கு அவரைச் சுற்றி கூட்டம் கூடிவிடுகிறது. தற்போது அஜித் நடிக்கும் அனைத்து படங்களும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட்டிங் போட்டு எடுக்கப்படுகிறது. அவுட்டோர் ஷீட்டிங் என்றால் வெளிமாநிலம் அல்லது வெளிநாடுகளில் எடுக்கப்படுகிறது.
ஆனால் டப்பிங் பணிகளுக்காக மட்டும் அஜித் சென்னையில் வெளியில் வருகிறார். அதுவும் பெரும்பாலும் இரவு நேரங்களில் டப்பிங் பணிகளை முடித்து விடுகிறார். அந்த நேரங்களிலும் அஜித்தைக் காண ரசிகர்கள் ஒன்று கூடி புகைப்படம் எடுத்து வருகின்றனர். அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆகவே தான் அஜித் தனது வீட்டிலேயே டப்பிங் தியேட்டர் கட்டி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.