ஓடுமா ஓடாதா என்கிற சந்தேகத்துடன் முதல்நாள் வெளியான மெர்சல் படத்திற்கு, பாஜகவை சேர்ந்த தமிழிசையும் ஹெச்.ராஜாவும் தங்களது விமர்சனம் மற்றும் எதிர்ப்பால் இலவச பப்ளிசிட்டி கொடுத்தனர். இதனால் பைரவா ரேஞ்சுக்கு இருந்த படம் கோடிகளில் கல்லா கட்ட ஆரம்பித்தது..
இதைப்பார்த்து இன்னும் சில படக்குழுவினருக்கு, தங்களுக்கும் இப்படி பாஜகவினர் உதவ மாட்டார்களா என ஒரு நப்பாசை வந்துள்ளது. அதை வெளிப்படுத்தும் விதமாகத்தான் இப்படை வெல்லும் படத்தில் நடித்துள்ள உதயநிதி, ஹெச்.ராஜாவுக்கு கோரிக்கை வைக்கும் விதமாக ஒரு ட்வீட் போட, அதற்கு ஹெச்.ராஜாவும் நாங்கள் எதிர்த்தால் கூட ஒன்றும் பிரயோஜனப்படாது என்று பதிலடி கொடுத்திருந்தார்.. இதற்கே படத்தின் இயக்குனர் கௌரவ் நாராயணன் ஹெச்.ராஜாவுக்கு நன்றியும் தெரிவித்திருந்தார்.
இதையெல்லாம் கவனித்து வந்த படத்தயாரிப்பு நிறுவனமான லைகா டென்ஷனாகி, நல்ல படம் தானே எடுத்திருக்கிறோம், அப்புறம் ஏன் இப்டி சீப் பப்ளிசிட்டி தேடி தேவையில்லாமல் வம்பையும் விலைக்கு வாங்குகிறீர்கள்.. படம் ரிலீசாகும் வரை கொஞ்சம் அமைதியாக இருங்கள் என இருவருக்கும் வாய்ப்பூட்டு போட்டுவிட்டதாம்.