ஓரளவுக்கு மேல் உலகப்புகழ் அடைந்துவிட்டால் தாங்கள் செய்வது அனைத்தும் சரியானது தான் என்கிற எண்ணம் சில நடிகைகளுக்கு வந்து விடுகிறது. ஆபாசமாக உடை அணிவதற்கு பெயர் போன முன்னாள் உலக அழகியான பிரியங்கா சோப்ரா மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன..?
சமீபத்தில் நமது பிரதமர் மோடியின் ஜெர்மனி பயணத்தின்போது, பெர்லின் நகரில், மரியாதை நிமித்தமாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, குட்டைப் பாவாடை அணிந்தபடி, மேலும் பிரதமருக்கு எதிரே மரியாதை இன்றி கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார் பிரியங்கா சோப்ரா.
இதற்கு பிரியங்காவுக்கு எதிராக கண்டனங்கள் கிளம்பின.. சமந்தா போல இவர் சமூகத்தை எல்லாம் திட்டவில்லை.. மாறாக பிரியங்காவும், அவரது தாயும் குட்டை பாவாடை அணிந்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்றையும் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் கூடவே “எனது தாயும் கூடத்தான் குட்டைப் பாவாடை அணிவார்,’’ என்றும் கூறியுள்ளார்.