ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘புரூஸ்லீ’ படம் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. விஜய்யும் அவர் ரசிகர்களும் கோபித்துக்கொள்ள கூடாது என்பதற்காக ‘அண்ணா உங்களுடன் நாங்களும் வருகிறோம்” என்றும் “பொங்கல் அன்று விஜய் படத்தை தான் முதலில் பார்ப்பேன்” என்றும் ஜல வார்த்தைகள் கூறி சரிக்கட்ட்ட முயன்றார் ஜி.வி.பிரகாஷ்..
அதற்கு விஜய் வேண்டுமானால் பெரியமனதுடன் சம்மதிக்கலாம். ஆனால் சூழ்நிலை ஒத்துழைக்க வேண்டு அல்லவா..? ஜி.வி.பிரகாஷ் நடித்து கடந்த வருடம் வெளிவந்த படங்கள் ஒன்று கூட தேறவில்லை. அதனால், ‘ப்ரூஸ் லீ’ படத்திற்கு மிகக் குறைவான விலையை நிர்ணயித்தார்களாம். படத் தயாரிப்புச் செலவை விட அவர்கள் கேட்ட தொகை குறைவாக இருந்ததாம்.
அதனால் பொங்கலுக்கு படத்தை வெளியிடுவதை தயாரிப்பு நிறுவனத்தினர் தள்ளி வைத்துவிட்டார்களாம். மேலும், ‘பைரவா’ படம் வெளிவருவதால் அந்தப் படத்துடன் போட்டி போட்டு வசூலைப் பெற முடியாது என வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் தயக்கம் காட்டியிருக்கிறார்கள்.
சரி.. ஜனவரி 26 படத்தை வெளியிடலாம் என நினைத்தால் அன்று ‘எஸ் 3, சிவலிங்கா’ ஆகிய படங்கள் ஏற்கெனவே தியேட்டர்களை புக் செய்து வைத்துள்ளதால் அன்றும் வெளிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பிப்ரவரியில் தான் புரூஸ்லி ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.. பெரிய படங்களுடன் மோதினால் என்ன ஆகும் என இப்போது ஜி.வி.பிரகாஷ் தெரிந்துகொண்டிருப்பார்.