அட கண்றாவியே.. ஏண்ணே உங்களுக்கா இந்த நிலைமை..?


இப்படி கேட்கும் நிலைமை யாருக்குமே வரக்கூடாது தான். அதிலும் குறிப்பாக சினிமா நட்சத்திரங்களுக்கு.. ஆனால் இப்படி கேட்க வேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டார் நடிகர் ஜெயராம். அப்படி என்னதான் ஆச்சு என்கிறீர்களா..? ஒன்றில்லை.. இரண்டு இல்லை… தொடர்ந்து இருபது பிளாப் படங்களை இந்த நான்கு வருடங்களில் தந்திருக்கிறார்..

இதனால் படம் கிடைப்பது ஒரு பக்கம் கஷ்டமாக இருக்க, அப்படியே கிடைத்தாலும் ஹீரோயின் கிடைப்பது ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கிறதாம். சிலரிடம் கால்ஷீட் கேட்டு சென்றால் அந்த தேதிகளில் தங்களுக்கு வேறு படம் இருப்பதாக கூறி நைஸாக நழுவுகிறார்களாம். இன்னும் சில நடிகைகளோ அவருடன் நடிக்க முடியாது என ஓப்பனாகவே சொல்கிறார்களாம்.

அதுல ஒரு நடிகை அறிமுகமாகி ரெண்டே ரெண்டு படத்துல மட்டுமே நடிச்சிருக்காம்.. ஆனா ரெண்டுமே மம்முட்டி கூட.. அந்த பொண்ணும் இவருகூட நடிக்க மாட்டேன்னு சொல்லிருச்சாம்.. காரணம் இவரு வயசானவருன்னு சொல்லுச்சாம். ஆனா இவரை விட ஏழெட்டு வயசு அதிகமான மம்முட்டி கூட மட்டும் எப்படி நடிச்சதுன்னு தான் தெரியல.. இப்ப ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ரேஞ்சுல இருக்குற ஒரு இரண்டாம் நிலை ஹீரோயினை ஜெயராமுக்கு ஜோடியா போட்டுருக்காங்களாம்.. என்னத்த சொல்றது..? இப்ப டைட்டிலை மறுபடியும் படிங்க.