ஃபிலிம்பாக்ஸ் புரொடக்ஷன்ஸ்” தயாரிப்பில் உருவாகும் படம் “ஒரு குப்பைக்கதை” இப்படத்தின் மூலம் இயக்குனர் அஸ்லம் தயாரிப்பாளராகிறார். இவர் ஸ்ரீகாந்த் நடித்த “பாகன்” படத்தினை இயக்கியவர்.
நடன இயக்குனர் தினேஷ் இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இவர் ஏறக்குறைய 130 படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அதுமட்டுமின்றி, “ஆடுகளம்” படத்திற்காக இவர் தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நம்மிடம் பேசிய தினேஷ் கூறியதாவது, “மிக அழுத்தமான எனக்கும் பொருத்தமான கதை என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டேன். நிறைய பேர் என்னை இதற்கு முன் அணுகியிருந்தாலும் இந்த கதை என்னைநடிப்புக்குள் இழுத்து வந்துவிட்டது. நடனத்தையும் தொடர்ந்துகொண்டு, கிடைக்கிற இடைவெளியில் இந்த படத்தைசெய்து முடிக்கிறேன். யாரவது தினேஷ் மாஸ்டர் இனிமே ஹீரோவாகத்தான் நடிப்பேன்னு அடம்பிடிக்கிறார்னு கொளுத்திப் போட்டா யாரும் நம்பிடாதீங்க. பொழப்பு முக்கியம் பாஸ்” என்று சிரித்துக்கொண்டே அடக்கமாகச் சொல்கிறார் மாஸ்டர்.
காளிரங்கசாமி இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் இயக்குனர் எழில் அவர்களிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். மேலும் “பாகன்” படத்தில் அஸ்லம் அவர்களிடம் இணைஇயக்குனராகப் பணியாற்றியுள்ளார் காளிரங்கசாமி.
அப்போது அஸ்லம் குப்பைக்கதையினால் ஈர்க்கப்பட்டு இப்படத்தை தானே முன்வந்து தயாரிப்பதாகவும் தெரிவித்து அவரையே இயக்குனராக்கியுள்ளார்.
அதென்ன ஒரு குப்பைக்கதை? டைட்டிலே வித்தியாசமாக இருக்கிறதே என்றால்,’’என்னப்பா படத்தை குப்பை படம்னு சொல்றேன்னு நிறைய பேர் கேட்டாங்க.. அவங்க அப்படி கேக்கும்போது அதுல ஒரு அக்கறை தெரிஞ்சது.. அதுவுமில்லாமல் இப்படி கேட்டுக் கேட்டே படம் எல்லாரிடமும் போய் சேர்ந்திரும்னு தெரிஞ்சிக்கிட்டேன். ஒரு படத்தின் தலைப்பு என்னடா இதுன்னு?? சரியாவோ இல்ல தவறாகவோ மக்களைப் போய்ச் சேர்ந்திரணும் முதல்ல.. இது அப்படி பரவக்கூடிய ஒரு தலைப்பு.. படம் பார்க்கும் போது அல்லது படம் பார்த்துட்டு வெளியே வருகிற எல்லாரும் இந்த படத்துக்கு இந்த தலைப்புதான் சரின்னு சொல்லிட்டுப் போவாங்க. அப்படியொரு கதை இருக்கு உள்ளுக்குள்ள.. என்கிறார் படத்தின் இயக்குனர் காளிரங்கசாமி.
“ஆதலால் காதல் செய்வீர்”, “வழக்குஎண் 18/9” படத்தில் நடித்த மனீஷா யாதவ் கதாநாயகியாக நடிக்கிறார்.
யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் “சென்னை எக்ஸ்பிரஸ்”, “கலகலப்பு”, “பட்டத்துயானை”, “மான்கராத்தே”, “யாமிருக்கபயமே”போன்ற படங்களில் நடித்தவர்.
சித்திரம்பேசுதடி, அஞ்சாதே, மௌனகுரு, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த மகேஷ்முத்துசாமி, இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். நீண்ட இடைவெளிக்குப்பின் காதல் படத்தின் இசையமைப்பாளார் ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைக்கிறார்.
பெல்ஜியத்தில் வாழும் இந்தியர் ராமதாஸ், அஸ்லமுடன் இணைந்து “ஒருகுப்பைக்கதை” படத்தை தயாரிக்கிறார்..
———————————
“KuppaiKathai” is new film being produced by “Film Box Productions”. Director Aslam who had earlier directed “Pagan” starred by Srikanth is getting introduced as a producer through the film “KuppaiKathai”.
Choreographer Dinesh is debuting in this movie as Hero. He has earlier choreographed for more than 130 films. He has bagged the National Award for the film “Aadukalam”.
Dinesh, while speaking to us said, “Since the story had a strong content in it and the character portrayed for me was satisfactory I had accepted to act in this film. Though many had approached me earlier, but this story had literally pulled me into acting. I still continue my choreography profession and in the available free time, I am completing my portions in this film. I request you not to believe any rumors saying that Dinesh master would be doing only Heroism characters”, laughingly said Choreographer Dinesh.
Kali Rangasami is debuting as a Director in this film. He has earlier worked as an assistant with Director Ezhil. Adding to it, Kali Rangasami has worked as a Co-Director with Director Aslam in the film “Pagan”.
During that period, Aslam had been attracted by this story narrated by Kali Rangasami and had accepted to produce this film making him as a Director.
ManishaYadhav who had earlier acted in “AadhalalKadhalSeiveer” and “Vazhakku En 18/9” is casting as a Heroine in this movie.
Yogi Babu who has acted in films“Chennai Express”, “Kalakalappu”, “Pattathuyaanai”, “Maan Karate” & “YamirukkaBayame” is playing an important character in this film.
Noted cameraman Mahesh Muthuswamy who had worked as a Cinematographer in the films “ChithiramPesuthadi”, “Anjathey”, “Mounaguru”, “IdharkuthaanAasaippattaiBalakumara” and few other films is taking care of Cinematography for this film. music is going to handle by Joshuva sreedhar ..
Ramadass an NRI from Belgium has joined hands with Aslam as a Co-Producer for the film “OruKuppaiKathai”.