சென்னையில் ஒரு நாள், புலிவால் போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம் தற்போது சரத்குமார் இரு வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் “சண்டமாருதம்” என்ற படத்தை தயாரித்து கொண்டிருகிறது. இந்த படத்தின் கதாநாயகிகளாக ஓவியா, மீராநந்தன் இருவரும் நடிக்கிறார்கள்.
முக்கிய வேடம் ஒன்றில் சமுத்திரகனி நடிக்கிறார். மற்றும் விஜயகுமார், ராதாரவி, இமான் அண்ணாச்சி, டெல்லிகணேஷ், காதல் தண்டபாணி , ஆதவன், பாபூஸ், அவினாஷ், மாளவிகா, கானா உலகநாதன் நடிக்கிறார்கள். இவர்களுடன் கன்னடத் திரையுலகின் பிரபல நடிகர் அருண்சாகர் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.இவர்களுடன் முக்கிய வேடம் ஒன்றில் ராதிகா சரத்குமார் நடிக்கிறார்.
இப்படத்திற்கு சரத்குமார் கதை எழுத, திரைக்கதை வசனம் எழுதுகிறார் கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்.
ஒளிப்பதிவு – N.S.உதய்குமார்
நா.முத்துக்குமார் பாடல்களுக்கு ஜேம்ஸ்வசந்தன் இசையமைக்கிறார்.
எடிட்டிங் – V.T. விஜயன்
கலை – மணிமொழியன் ராமதுரை.
ஸ்டண்ட் – ஸ்டண்ட் சிவா
நடனம் – கல்யாண், சிவசங்கர்
தலைமை செயல் அதிகாரி – பா.சக்திவேல்
தயாரிப்பு ஒருங்கினைப்பு – A.N. சுந்தரேசன்,
தயாரிப்பு மேற்பார்வை – சபரிஷ் வினோத்
தயாரிப்பு – R.சரத்குமார் திருமதி ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன்.
இயக்கம் – வெங்கடேஷ்
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதனை சுற்றயுள்ள பகுதிகளில் விறு விருப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.