கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக லாரன்ஸ் நடித்த படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் திடீரென அவர் நடித்த ‘சிவலிங்கா’, மற்றும் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ ஆகிய படங்கள் ஒரேநாளில் வெளியாவதாக அறிவிப்பு வெளியாகின. ஆனால் அப்படி வெளியானால் அது இரண்டு படங்களின் வசூலையுமே பாதித்துவிடும் என்று கருதிய லாரன்ஸ், சிவலிங்கா படஹ்தை இயக்கிய பி.வாசுவிடம் அந்தப்படத்தின் ரிலீஸை தள்ளி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்..
பி.வாசுவும் வேறு வழியின்றி அதற்கு அரை மனதாக சம்மதித்துள்ளார். அதன்பின் தான் வேந்தர் மூவிஸ் தயாரித்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் மட்டும் பிப்-17ஆம் தேதி வெளியாகும் என தொடர்ந்து அறிவிப்பு வெளியாகி வருகிறது.. இந்நிலையில் இந்தப்படத்தின் வெளியீட்டிற்கு எதிராக சினிமா பைனான்சியர் போத்ரா வாங்கி இருக்கின்ற நீதிமன்ற தடையை உடைப்பதற்காக வேந்தர் மூவிஸ் மதனும், டாக்டர்.சிவபாலனும் கடுமையாக முயன்று வருகின்றனர்.
ஆனாலும் இன்னும் சாதகமான சூழல் உருவாகவில்லை என்றே சொல்லப்படுகிறது.. இதேநிலை நீடித்தால் இந்தவாரம் படம் வெளிவருவதற்கு 99 சதவீதம் சாத்தியம் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.. இந்த விஷயங்களை கவனித்து வரும் இயக்குனர் பி.வாசு பேசாமல் என்னுடைய சிவலிங்கா படத்தையாவது ரிலீஸ் பண்ணியிருக்கலாமே என லாரன்ஸிடம் புலம்பினாராம்.