சினிமா அப்படித்தான். தெருவில் இருந்தவரை கோபுரத்தில் கொண்டுபோய் உட்காரவைத்து விடும். ஆனால் அங்கே உட்காரும்போது கவனமாக உட்காரவேண்டியது அவர் கடமையே தவிர அதற்கு சினிமா பொறுப்பேற்காது. அதற்குள்ளேயே கிடைக்கும் பணம், புகழ் பாந்தாவால் வீணாக ஒரு ஆட்டம் ஆடிவிடுகிறார்கள் பலர். ஆனாலும் எல்லா இடங்களிலும் இந்த ஆட்டம் எடுபடுவதில்லை என்பதற்கு பரோட்டா காமெடி நடிகரின் அனுபவம் லேட்டஸ்ட் உதாரணம்.
விளையாட்டு படத்தில் சாப்பிடுவதையே விளையாட்டாய் பண்ணியதால் ஹிட்டானவர் அந்த காமெடி நடிகர். கொஞ்ச நாட்களுக்கு முன்பு கபடி இயக்குனர் மற்றும் கடற்கரை இயக்குனர் இருவருடனும் சேர்ந்து பார்ட்டியில் கலந்துகொண்ட பரோட்டாவுக்கு போதை மிதமிஞ்சி விட்டதாம். இருந்தாலும் வரும்போது அவரே காரை ஓட்டிவர, சிக்னலில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் சிக்கியுள்ளார்கள்.
பிரபலங்கள் மூவரையும் ஒன்றாக பார்த்து ஆச்சர்யப்படாலும், கடமை நினைவுக்கு வரவே வாயை ஊதச்சொல்லி அவர்கள் போதையில் இருப்பதை கண்டுபிடித்த போலீசார் அவர்களை ஸ்டேஷனுக்குள் அழைத்து சென்றுள்ளனர்.. கபடியும் கடற்கரையும் போலீசிடம் நயமாக கெஞ்ச, பரோட்டாவோ நீங்க ஏன் சார் கெஞ்சுறீங்க.. ஆக்சுவலி ரூல்ஸ் என்னன்னு தெரியுமா? என எகிற ஆரம்பித்தாராம்.
சாதாரணமாக கண்டித்து அனுப்பி விடலாம் என நினைத்த போலீஸாருக்கு பரோட்டாவின் செயல் கோபத்தை மூட்டியுள்ளது. சுதாரித்த இரண்டு இயக்குனர்களும் மிகவும் பணிவுடன் பேசி கொடுக்கவேண்டியதை கொடுத்து கொஞ்ச நேரத்திலேயே எஸ்கேப் ஆகிவிட்டார்களாம். ஆனால் பரோட்டாவை மட்டும் போலீஸார் விட மறுத்துவிட்டார்களாம்.
அதன்பின், மறுநாள் காலை விஷயத்தை கேள்விப்பட்டு அங்கே வந்த பிச்சுவாவின் மேனேஜர் மிகப்பெரிய தொகையை கொடுத்து பரோட்டாவை மீட்டுச்சென்றாராம். நல்லவேளை பரோட்டாவை கொத்து பரோட்டா ஆக்காமல் விட்டிருந்தனர் போலீஸார்.
பின்குறிப்பு : குடித்து குடித்து தொண்டை புண்ணாகிவிட்டதால், இனி தொடர்ந்து குடித்தால் உயிருக்கு ஆபத்து என டாக்டர்கள் எச்சரித்ததால் தற்போது புதுவிதமான போதை ஏதாவது இருக்கிறதா என தேடிவருகிறாராம் பரோட்டா..?