எந்தவித பின்புலமும் இல்லாமல் நடிக்க வந்து பெரிய ஆளான நடிகைகள் தான், தாங்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளானோம் என கூறுவது வழக்கம்.. ஆனால் பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகளும், நடிகையுமான சோனம் கபூர், தான் சிறு வயதில் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன் என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.. ராஞ்சனா படத்தில் தனுஷின் ஜோடியாக நடித்தாரே அவர்தான் இவர்.
இதுபற்றி அவர் கூறும்போது, “பெரும்பாலான பெண்கள், இளம் வயதில் பிறரின் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் கொடுமை, சிறுமியாக இருந்தபோது எனக்கும் நடந்தது. அதனால் ஏற்பட்ட வேதனையை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அந்த சம்பவம் நீண்டகாலம் என்னுள் பாதிப்பை ஏற்படுத்தியது” என கூறியுள்ளார்.