பீப் சாங்கிற்கு டான்ஸ் ஆடிய பிரகாஷ்ராஜ்..!


அனிருத் இசையில் சிம்பு பாடி உலகப்புகழ்பெற்ற ‘பீப் சாங்’ பற்றி திரும்பவும் அறிமுகம் தேவையில்லை.. சென்னை மழைவெள்ளத்தில் மிதந்த அந்த கொடூர தினத்தில் ‘என்ன …க்கு லவ் பன்னணனும்” என சிம்புவும் அனிருத்தும் இணைந்து இந்தப்பாடலில் தங்களது வக்கிர முகத்தை காட்டி மக்களை அதிரவைத்தார்கள்.. அதன்பின்னர் தலைமறைவானது, போலீஸ் தேடியது எல்லாம் தனிக்கதை.

அதன்பிறகு பீப் சாங் பற்றிய பேச்சு எழவில்லை..’இது நாம ஆளு’ படத்தில் சிம்பு, “நான் வண்டை வண்டையா திட்டுவேன்” என சொல்ல, அதற்கு சூரி, “நான் பீப் சவுன்ட் போட்டுக்குவேனே” என சிம்புவையே கலாய்த்திருப்பார்.. இப்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தின் டீசர் ஒன்றை பார்த்ததும் செம ஷாக்.

அதில் போலீஸ் அதிகாரிகளாக வருகிறார்கள் பிரகாஷ்ராஜும் ரோபோ ஷங்கரும். ஒரு இடத்தில் ரோபோ ஷங்கர் ‘என்ன ..க்கு லவ் பண்ணனும்’ என பீப் சாங்கை பாட, கூடவே ஸ்டெப்ஸ் போட்டு ஆடியபடியே ஜீப்பிற்கு நடந்து செல்கிறார் பிரகாஷ்ராஜ். அந்தவகையில் படம் ரிலீசாகும்போது இந்த பீப் சாங் விவகாரம் மறுபிறப்பு எடுக்கும் என்றே தெரிகிறது..